Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - புகார் எண் இதோ

அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை -  புகார் எண் இதோ

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு

பகிரவும் WhatsApp Facebook

நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுங்கள் என தமிழ்நாடு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன்

தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் இயக்கப்படும் சுமார் 4,000 தனியார் ஆம்னி பேருந்துகளில் 2,500 பேருந்துகள்தான் இங்கிருந்து இயக்கப்படுகிறது. மற்ற பேருந்துகள் வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வந்து செல்பவை. இந்தப் பண்டிகைக் காலங்களிலும், ஏற்கெனவே கடந்த 2023-ம் ஆண்டு அரசு நிர்ணயித்த அதிகபட்சக் கட்டணத்திற்கு மிகாமல் ஆம்னி பேருந்து கட்டணம் மட்டுமே வசூலிக்க ஒப்புக் கொண்டுள்ளோம். மீறி வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். எங்கள் சங்கத்தில் உள்ள எல்லா உரிமையாளர்களின் பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை. புதிதாக வந்துள்ள சில ஆம்னி பேருந்துகளில் தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.


இணையத்தில் கட்டணம்...

ஆம்னி பேருந்து சங்கங்களால், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டண விவரங்களை https://aoboa.co.in/BusFare என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். சரியான கட்டணம் உள்ள பேருந்துகளில் பயணம் செய்ய மக்களை, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் வலியுறுத்தினார். கூடுதல் கட்டணம் உள்ளிட்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான புகார்களுக்கு 9043379664 எண்ணை தொடர்பு கொள்ளலாம். [email protected] மின்னஞ்சல் முகவரியிலும் புகார் செய்யலாம்.




முந்தைய செய்தி
2027-ல் 9.1% சம்பள உயர்வுக்கு வாய்ப்பு - எந்தெந்த துறைகள்?
அடுத்த செய்தி
மாமன்றக் கூட்டங்கள்: புதிய நெறிமுறை வெளியீடு

தொடர்புடைய செய்திகள்